கிழக்கு மாகாணத்தில் மூன்றாம் பாலினத்தவர்களைக் கண்டறிவதற்கான செயற்திட்டம்

அனுஷியா ஸ்ரீசங்கர்

கிழக்கு மாகாணத்தில் மூன்றாம் பாலினத்தவர்களைக் கண்டறிவதற்கான செயற்திட்டம் அடுத்தாண்டு துவங்கும் மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர்

மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய விடயங்கள் விலாவாரியாகப் பேசப்பட்டு வருகின்ற சமகாலச் சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் மூன்றாம் பாலினத்தவர்களைக் கண்டறிவதற்கான செயற்திட்டம் அடுத்தாண்டு துவங்கும் என மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் தெரிவித்தார்.

எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு தொடர்பாக தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதன் ஒரு விரிவாக்கமாக இந்த செயற்திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுபற்றித் தொடர்ந்து தெரிவித்த அவர்@ ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு சமுதாயத்தின் எல்லாத் தரப்பினருக்கும் தேவையாகவுள்ளது.

ஒருபாலுறவுக் காரர்களும் எயிட்ஸ் விடயத்தில் கரிசனைக்குரிய தரப்பினராக உள்ளார்கள்.

அதன் காரணமாக மறைமுகமாக தங்களை மூன்றாம் பாலினத்தவர்கள் எனக் கருதிக் கொள்ளும் ஒரு சாரார் சமூகத்தின் மத்தியில் உள்ளமை பற்றி சிலாகித்துப் பேசப்படுகிறது.

மூன்றாம் பாலினத்தவர்களை தங்களைக் கருதிக் கொள்வோரை அதற்கென உள்ள விஷேட நிபுணத்துவக் குழுவினர்தான் அடையாளம் காண வேண்டும்.

வடபகுதியில் இது சம்பந்தமாக சில ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், கிழக்கு மாகாணத்தில் இந்த முயற்சி இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை

அதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் மூன்றாம் பாலினத்தவர்களாகக் கருதிக் கொள்வோர் சம்பந்தமான எந்தவொரு புள்ளிவிவரங்களும் இதுவரை இல்லை.

மூன்றாம் பாலினத்தவர்கள் எனக் கூறிக் கொள்வோர் நாங்கள் சாதாரணமாக அடையாளம் காண முடியாது இது ஒரு இலகுவாக விடயமல்ல. இதற்கென நிபுணத்துவம் வாய்ந்த பயிற்றப்பட்ட குழுவினரைக் கொண்டுதான் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.

பால் மாற்று சிகிச்சைகளைச் செய்து கொண்டவர்கள் முதலில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கு விரும்ப வேண்டும். இது அவசியமானது.

இதே வேளை, சுகாதாரத் திணைக்களத்தின் மறுஉற்பத்திக்கான பிரிவின் மூலமும் மருத்துவ ரீதியாக சில செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]