அனுராதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் அட்டகாசம் செய்த இரண்டு பெண்கள் கைது!!

நீதிமன்றத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று முடியைப் பிடித்துக் கொண்டு இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த இரண்டு பெண்களையும் பொலிஸார் கைது செய்து நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இரண்டு பெண்களையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மதவாச்சியைச் சேர்ந்த 35 வயதான லீலா நந்தனி மற்றும் கல்லஞ்சியைச் சேர்ந்த 33 வயதான ஆய்ராங்கனி திலகா ஆகியோரே இவ்வாறு கைது செய்பய்பட்டுள்ளனர்.

வழக்கு ஒன்றில் முன்னிலையாவதற்காக சென்றிருந்த இருவரும் நீதிமன்றம் என்று கூட பாராது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]