முகப்பு News Local News அனுராதபுரத்தில் குழந்தையொன்றுக்கு மதுபானம் பருக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

அனுராதபுரத்தில் குழந்தையொன்றுக்கு மதுபானம் பருக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

அனுராதபுரம், மீகவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனங்கமுவ பகுதியில் ஒரு வயது குழந்தையொன்றுக்கு மதுபானம் பருக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை மீகவெவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மீகொல்லேவெவா பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வின் போது குழந்தையின் தந்தை மது அருந்தி விட்டு கையில் வைத்திருந்த தனது குழந்தைக்கு மது பருக்கும் காட்சியொன்றை காணொளி மூலம் பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்

குறித்த காணொளியை அடிப்படையாக கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மீகவெவ பொலிஸார் குழந்தையின் தந்தை உட்பட நால்வரை கைதுசெய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com