அனுபமாக்கு நேர்ந்த சோதனை!

கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபமா. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் நடித்த ஹீரோயின்களில் இவரும் ஒருவர்.

தெலுங்கிலும் இவர் நடித்து வருகிறார். கடந்த பொங்கல் தினத்தன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்து ராம் சரண் ஹீரோவாக நடிக்க சுகுமார் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக மகிழ்ச்சி வெளிப்படுத்தி இருந்தார்.

தற்போது அவரை படத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இயக்குனர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடிக்க முடியாது என்பதால் அனுபமாவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்றும் அவருக்கு பதிலாக வேறு ஹீரோயினை தேடிவருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதையறிந்து வருத்தத்தில் இருக்கிறார் அனுபமா. இதுகுறித்து தனது டுவிட்டரில் உண்மை என்ற கெப்ஷனுடன்,’என் வாழ்வில் நான் பின்னடைவை சந்தித்திருக்கிறேன். என் வாழ்வில் நல்ல விஷயங்கள் சிலவற்றில் நான் எப்போதும் ஒதுக்கப்பட்டிருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிகிறது. அதேசமயம் அது இன்னொரு நல்ல விஷயத்தை நோக்கி மாற்றியிருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.