அனிருத்துக்கு வந்த சோதனை ஐயோ!

இசையமைப்பாளர் அனிருத் என்ற பெயரில், இணையத்தில் செவ்வாய்க்கிழமை வெளியாகிய ஆபாச வீடியோ, வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோ தன்னுடையது இல்லை என அனிருத், மறுத்துள்ளார்.

அனிருத் போன்ற தோற்றம் கொண்ட ஒரு இளைஞனும் பெண்ணும் இருக்கும், அந்தரங்க ஆபாச வீடியோ, வட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகின்றது. எனினும், இந்த வீடியோவில் இருப்பது அனிருத் அல்ல என்பதற்கு இரு காரணங்கள் கூறப்படுகின்றன.

அனிருத் எப்போதும் ஆட்டுத் தாடி போன்ற குறுந்தாடியை வைத்திருப்பார், இந்த வீடியோவில் இருக்கும் இளைஞனுக்கு தாடி இல்லையாம். அடுத்தது, அனிருத்தில் இடது கையில் பச்சை குத்தியிருப்பார், இந்த வீடியோவில் உள்ள இளைஞனின் கையில் அதுவும் இல்லையாம்.

எவ்வாறாயினும், அந்த இளைஞன், அனிருத்தின் தோற்றத்தில் இருப்பதால், அனிருத் என்ற பெயரிலேயே இந்த வீடியோ பரப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் அனிருத், டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார், “இந்தக் காரியத்தை செய்தவர்கள், தயவுசெய்து வாழ்க்கை மற்றும் கண் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.