அனிருத்தின் அடுத்த படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு.

அனிருத்தின் அடுத்த படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு.

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘ரெமோ’ கடந்த ஒக்டோபர்  மாதம் வெளிவந்து உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை அனைவரும் அறிவோம். அதேபோல் அனிருத் தற்போது ‘தல 57’ படத்தின் இசைப்பணியில் பிசியாக உள்ளார்.

இந்நிலையில் அனிருத் இசையமைத்த படமான ‘ரம்’ படத்தின் ரிலீஸ் திகதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படம் பெப்ரவரி  10ஆம் திகதி  வெளிவருகிறது. அனிருத் இசையமைத்துள்ள முதல் த்ரில்லர் படம் ‘ரம்’ என்பதால் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரிஷிகேஷ், நரேன், சஞ்சிதா, மியா ஜோர்ஜ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாய்பரத் இயக்கியுள்ளார்.