அனிருத்தால் தற்கொலைக்கு முயற்சித்த இயக்குனர்!

தற்போது சோமபான ரூப சந்தரன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகுபவர் பொன்முடி. இவர் பையா, பீச்சாங்கை போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர்.

இந்த படத்தில் ஒரு பாடலை அனிருத்தை பாட வைக்கலாம் என இசையமைப்பாளர் அப்பாஸ் ரஃபி உறுதியளித்துள்ளதால் அந்த நம்பிக்கையில் பட வேலைகளை பார்த்துள்ளார்.

தற்போது மிகவும் பிஸியாக இருப்பதால் அனிருத் பாட மறுத்துள்ளார், அடுத்த படத்தில் பாடுகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

இதை கேட்ட இயக்குனர் பொன்முடி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவரை உதவி இயக்குனர்கள் காப்பாற்ற இப்போது ஓய்வில் இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், அனிருத் பாடவில்லை என்பதால் மனமுடைந்து சாக முடிவெடுத்தேன். ஆனால் எனது உதவியாளர்கள் என்னை காப்பாற்றிவிட்டனர். இப்போதும் எனது உடல் நிலை மோசமாக தான் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா தெரியவில்லை என கூறியிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]