அனர்த்த முகாமைத்துவப்பிரிவிற்கு புதிய உதவிப்பணிப்பாளர் நியமனம்.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு புதிய உதவிப்பணிப்பாளராக வாழைச்சேனையைச் சேர்ந்த  சின்னையா கோகுலராஜா இன்றைய தினம் புதன்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஏற்கனவே மட்டக்களப்பில் கடமையாற்றிய எம்.றியாஸ் அம்பாறை மாவட்டத்தில்  இன்றைய தினம் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு  மாவட்டத்தின் வாழைசசேனை புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட சின்னையா கோகுலராஜா கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்பு கலைமாணிப்பட்டத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அனர்த்த முகாமைத்துவ முது விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக தற்காலிக விரிவுரையாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த வேளை 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது தொண்டராக செயற்பட்டார்.

பின் சர்வதேச தொண்டு நிறுவனமான ஓக்ஸ்பார்ம், ஐக்கிய நாடுகளுக்கான கைத்தொழில் அபிவிருத்தி நிறுவனம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் என்பவற்றில் அனர்த்த சார் அதிகாரியாகக் கடமையாற்றினார்.

2012ம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மாவட்ட நிவாரண இணைப்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்திலும் அனர்த்த முகாமைத்துவ தலைமைக்காரியாலயத்தில் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவில் உடவிப்பணிப்பாளராக கடமையாற்றி தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]