அனர்த்த பகுதிகளில் சுகாதார சேவை இயல்பு நிலையில் : ராஜித

அனர்த்த பகுதிகளில் சுகாதார சேவை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

 ராஜித சேனாரட்ன

அநேகமான பகுதிகளில் வைத்தியசாலைகள் வழமைக்கு திரும்பியுள்ளன. நீரில் மூழ்கியுள்ள வைத்தியசாலைகளின் பணிகளை வேறு இடத்தில் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சுகாதார சேவை வழங்கப்படுகிறது.

அவற்றுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தேவைகள் அளவு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் பரவமால் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் கிணறுகளை தூர்வாறும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]