அனர்த்தத் முன்னாயத்தச் செயற்பாட்டுக்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி

சமூதாய மட்டத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தத் முன்னாயத்தச் செயற்பாட்டுக்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்றது.

இரண்டு நாட்களைக் கொண்ட இப் பயிற்சியாளர்களுக்காக பயிற்சி நெறியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பணியாற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிருவாகக் கிராமசேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் – காணி திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன், சமுர்த்தி த் திணைக்க பணிப்பாளர் திருமதி ஏ.பாக்கியராஜா, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பயிற்சி மற்றும் விழிப்புணர்வுப் பிரிவின் பணிப்பாளர் சுகத் திசநாயக்க, மட்டக்களப்பு வாநிலை அவதான நிலையத்தின் அதிகாரி கே.சூரியகுமார், சமுர்த்தித்திணைக்கள தலைமையக சிரேஸ்ட முகாமையாளர் சம்பா ஜானக ஓபதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டமானது இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுகின்ற மாவட்டம் என்பதுடன், வெள்ளம், வரட்சி, சூறாவளி என இயற்கையின் அனைத்து அனர்த்தங்களையும் எதிர் கொள்ளும் மாவட்டமுமாகும்.

அனர்த்தத் முன்னாயத்தச் அனர்த்தத் முன்னாயத்தச்

அந்த வகையில், மாவட்டத்திலுள்ள மக்களை அனத்தத்திற்கு முன் , அனர்த்த வேளை, அனர்த்தத்திற்கு பின் என அனைத்துக்காலங்களுக்கும் ஏற்ற வகையில் தயார் படுத்தும் வகையில் பயிற்சி நெறிகளையும் ஒத்திகைகளையும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு மேற்கொண்டு வருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அதன் ஒரு பகுதியாக இந்த பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி நடைபெற்றது. இப் பயிற்சிகளை நிறைவு செய்த பின்னர் இவர்கள் கிராம மட்ட, பிரதேச மட்டங்களில் மக்களை விழிப்பூட்டும் தயார்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]