அனர்த்ததில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜனவரியில் இழப்பீடு

அனர்த்ததில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜனவரியில் இழப்பீடு

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது முழுமையாகப் பாதிப்படைந்த வீடுகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இழப்பீடு  பெற்றுக்கொடுக்கப்படும் என தேசிய அனர்த்த நிவாரண நிலையம் அறிவித்துள்ளது.

அனர்த்தம் காரணமாக 618 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும்,42,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது எனவும் தேசிய அனர்த்த நிவாரண நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்துள்ள 90 வீதமான வீடுகளுக்கு அடிப்படை நிவாரணத் தொகையாக தலா 10,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. நிவாரண உதவிக்காக 350 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை, அடிப்படை நிவாரணத் தொகையான 10,000 ரூபா கிடைக்காத வீட்டு உரிமையாளர்கள் தங்களின் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு நிவாரணத் தொகையினை பெற்றுக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]