அனந்தி, சர்வேஸ்வரன் அமைச்சர்களாக நியமனம்

வடக்கு மாகண புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன், கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் வடக்கு முதலவர் சி.வி விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் 3 மாதத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் மேற்படி நியமனம் வழங்கப்பட்டது.

அனந்தி சர்வேஸ்வரன்

விவசாய அமைச்சு முதலமைச்சரின் கீழும், அதன் பிரிவில் இருந்த கூட்டுறவு மற்றும் சமூக சேவைகள் மகளிர் விவகார அமைச்சுக்கள் அனந்தி சசிதரனுக்கும், கல்வி பண்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு கந்தையா சர்வேஸ்வரனுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]