உலகத்தின் பெரும்பான்மையான நாடுகளில், விஷேட சுற்றுலாவுக்குரிய பல பிரதேசங்கள் காணப்படுகின்றன.

ஆனால் பூமியின் முனைப்பகுதிகளிலே பரந்து விரிந்த பணிமலைகளின் சுற்றுலா தரிசனம் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பார்த்ததுண்டா ?

பனியை தவிர என்ன இருக்கு என்று அலட்சியமாக கடந்துபோகமுடியாத அபூர்வ அழகியல் தரிசனம் அந்தார்டிக் பிரதேசத்தில் நாம் காணலாம்.

பனிமலைகள்,கடல் ,பென்குயின்கள் ,கடல் சிங்கங்கள் ,அரிய வகை கடல் உயிரினங்கள் என்று அனைத்தும் அமைதியும் அழகியலும் கலந்த அந்தார்டிக்காவில்
நாம் காணக்கூடியவை. தென்கோடியில் நாம் தரையிரங்கையில் நாம் காண்பது முற்றிலும் புதிய சொர்க்கம். நாம் கற்பனை செய்ததை விட பிரமாண்ட உலகம் நம் முன்னே விரிந்திருக்கும்இயற்கை சுற்றுசூழலின் அழகு.

அந்த பனி நிலம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான பனிப்பாறைகள் என்பன பிரமிப்பை ஏற்படுத்தும்.
அந்தார்ட்டிக்கா நாம் பார்க்கவேண்டிய தேசங்களில் மிக முக்கியமானது.

சுமார் 20,000 கிலோமீட்டர் பனிமூடிய நில மற்றும் நீர் பிரதேசம்.

அந்தார்ட்டிகா சென்றால் பென்குயின்களை முதன் முதலில் சந்திகாலம் Falkland Islands ல் .

1982ல் ஆர்ஜெண்டினாவுக்கும் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கும் நடந்த போருடன் தொடர்புடைய தீவு Falkland Islands. இந்த தீவு பென்குயின்களின் ஒன்றிடம் எனுமளவிற்கு பலதரப்பட்ட வகை வகையான பென்குயின்களை இங்கு காணலாம்.
முக்கியமாக rockhopper பென்குயின்கள்.

நீல நிற கண்கள் கொண்ட இவை ஒன்றின் பின் ஒன்றாக அடிச்சுவடுகளை பின்பற்றி நடந்து செல்லும் முறை உண்மையிலேயே சிலிர்க்கவைத்தது.

நாங்கள் இரண்டாவதாக சென்ற இடம் தென் ஜார்ஜியா தீவு (South Georgia Island).
அங்கு ஆயிரக்கணக்கான பென்குயின்களை பார்த்தோம். சிறிய குட்டி பென்குயிகளில் இருந்து வயதான பென்குயின்கள் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் பார்த்தது மட்டுமல்ல அதன் குளிர்கால பாட்டினையும் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது.


பென்குயின்கள் ஒன்றாக இணைந்து அதனது மொழியில் பாடும் ஓசை ஆற்றினை தாண்டி மலைகளிலும் எதிரொலித்தது.

அந்தார்டிக் தேசம் அழகிற்கும் அச்சத்திற்கும் உரிய இடம். சூரிய ஒளி மின்னும் பனிப்பாறைகளை,அந்த கடலில் சென்று ரசிப்பது புதுமையான அனுபவம். நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் தெரியும் பனி மலைகள் உங்களை பரவசப்படுத்தும். அந்த பனி சூழ் தேசத்தில் நடந்து திரிகையில் நம்மை அறியாத ஆழ்ந்த அமைதி எப்போதும் குடிகொள்ளும். அந்தார்டிக்கா பயணம் ஒரு அழகிய கனவு போல இருக்கும் .


நாம் துருவப்பகுதிகளை எட்டுவது அத்தனை சுலபமல்ல நம் அழுக்கு நிறைந்த ஆன்மாவை சுத்திகரிக்கும் அனுபவத்தை தரவல்ல அழகிய அனுபவம் இந்த அந்தார்ட்டிக்கா பயணம்…..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]