அநுருத்த பொல்கம்பொல கைது

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல கைதுசெய்யப்பட்டுள்ளார்.

8 மில்லியன் பணமோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அநுருத்த பொல்கம்பொலவின் நியமனத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில், கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதி இரத்துச் செய்திருந்தார்.

முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், கைது செய்யப்பட்ட அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திசாநாயக்க அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப அநுருத்த பொல்கம்பொல புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அநுருத்த பொல்கம்பொலவின் நியமனமும் பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்ததை அடுத்து, குறித்த நியமனத்தையும் ஜனாதிபதி இரத்துச் செய்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி பேராசிரியர் ஐ.கே.மஹானாம மற்றும் முன்னாள் அரச கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.திசாநாயக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 2 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]