அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே பயணித்த ஜீப் விபத்து

ஐக்கிய தேசிய கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே பயணித்த ஜீப் வண்டி விபத்திற்குள்ளாகியுள்ளது.

நீர்கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் புஸ்கொலதெனிய பிரதேசத்தில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கிரிவுல்ல காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப் வண்டி, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் வாகனத்தில் மோதியுள்ளது.

எனினும் இந்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை

விபத்து தொடர்பில் கிரிவுல்ல காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]