அநுராதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குள்ள மனிதர்களது நடமாட்டங்கள் – அச்சத்தில் பொதுமக்கள்..

அநுராதபுரம் பொலிஸ் வலயத்திலுள்ள மஹவிலச்சிய மற்றும் தந்திரிமலை பகுதிகளில் இரண்டு அடி உயரமான மர்மமான குள்ள மனிதர்களது நடமாட்டங்கள் காணப்படுவதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் சிலதினங்களுக்கு முன்னர் இந்தக் குள்ள மனிதர்கள் நடமாடியுள்ளனர். இவர்களில் ஒருவர் பெண்னொருவருடய கையைக் கீறி காயப்படுத்தியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தந்திரிமலை மஹசியபலாகஸ்வெவ பகுதியில் மர்ம மனிதரது நடமாட்டத்தை நேரில் கண்ட சிலர் தந்திரிமலை பொலிஸ்நிலயத்திற்கு தொலைபேசி மூலம் அறிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் தேடுதல்களை நடத்தினர். எனினும் அவ்வாறு எந்த நடமாட்டத்தையும் காணவில்லை என பொலிசார் தெரிவித்தனர். குறித்த விடயம் தொடர்பில் தந்திரிமலை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது:

மர்ம உருவத்திலான குள்ள மனிதர்கள் நடமாடுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தேடுதல் நடத்தியும் நாங்கள் எவரையும் காணவில்லை. மக்கள் கூறும் விடயங்களைப் பாக்கின்றபோது ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கலாமென தந்திரிமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார் .

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]