அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12பேர் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இரு படகுகள் காங்கேசன்துறை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்திய இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் நெடுந்தீவிற்கு அண்மித்த கடற்படைப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போதே இன்று 05 அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படையினர் தடுத்து வைத்திருப்பதுடன், கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களையும் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

இவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]