அத்தியாவசியப் பொருள் நிவாரண விநியோகம்…

கிழக்கில் அடைமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச ஞானம் அறக்கட்டளை மற்றும் லைகா குழுமம் நிறுவனங்களினால் உலருணவு மற்றும் அத்தியாவசியப் பொருள் நிவாரண விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்ட நிவாரண விநியோகம் இரண்டாம் கட்டமாக திங்கட்கிழமையும் 03.12.2018 இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை வெல்வெளி ஆரையம்பதி கோறளைப்பற்று மத்தி கோறளைப்பற்று கிரான் ஏறாவூர்ப்பற்று வாகரை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நிவாரண உலருணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

விநியோகிக்கப்பட்ட உலருணவுப் பொதியில் அரிசி பருப்பு சீனி தேயிலை பிஸ்கட் ரின் மீன் பால்மா உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்கியிருந்தன.

மேலும் குடிநீர் போத்தல்கள் படுக்கை விரிப்புக்கள் கூரைத் தகடுகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களும் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

அத்தியாவசியப் அத்தியாவசியப் அத்தியாவசியப்

பிரதேச செயலாளர்கள் உதவிப் பிரதேச செயலாளர்கள் இடர் முகாமைத்துவ பிரிவின் அலுவலர்கள் கிராம சேவையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சர்வதேச ஞானம் அறக்கட்டளை மற்றும் லைகா குழுமம் நிறுவனங்களினால் விநியோகிக்கப்பட்ட உலருணவு மற்றும் அத்தியாவசியப் பொருள் நிவாரணப் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

செங்கலடி நிருபர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]