அத்தனகல ஓயா தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, கம்பஹா பகுதியிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

குறிப்பாக நீர்கொழும்பு, ஜா-எல, கட்டான, மினுவாங்கொடை, கம்பஹா மற்றும் அத்தனகல ஆகிய பகுதிகளில் தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மகா ஓயாவின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் படல்கம, கிரிவுல்லை பிரதேசங்களை சேர்ந்த தாழ் நில மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனர்த்த நிலைமை காரணமாக, நாட்டின் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 913 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]