அதை நினைத்தாலே மனதுக்கு சங்கடமாக இருக்கின்றது

“போதை பொருள் வழக்கில் எனது மானேஜர் ரோணி கைதானது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரையும் நம்ப முடியவில்லை. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ரோணி எனக்கு மட்டும் மானேஜராக இல்லை. நிறைய பேருக்கு மானேஜர் வேலை பார்த்துள்ளார்.

தயாரிப்பாளர்களிடம் எனது சம்பள விவரங்கள் பற்றி பேசுவது, கால்ஷீட் விவகாரங்களை கவனித்துக்கொள்வது போன்ற பணிகளை செய்தார். அவர் கைதானதை தொடர்ந்து இனிமேல் மானேஜரே வைத்துக்கொள்வது இல்லை என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன். சம்பளம், கால்ஷீட் விவரங்களை இனி எனது குடும்பத்தினரே கவனித்துக் கொள்வார்கள்.

அதை நினைத்தாலே

வெவ்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறேன். சிலரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கிறேன். நான் நம்பியவர் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டது தெரியவரும்போது சங்கடமாக இருக்கிறது. அதனால்தான் பொறுப்புகளை குடும்பத்தினரிடம் தற்போது ஒப்படைத்து இருக்கிறேன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]