அதுக்கப்பறம் தான் கல்யாணம்: கண்டிஷன் போடும் நடிகை

மை அர்த்தமுள்ள நடிகை தமிழில் அறிமுகமாகி சுமார் 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.

தமிழின் உச்ச நடிகர்கள் இருவரது படங்களிலும் நடிகை தற்போது நடித்து வருகிறார். அந்த இரு படங்களுமே விரைவில் ரிலீசாக இருக்கிறது.

மேலும் தெலுங்கில் பிரம்மாண்ட படத்தில் நடித்த வில்லன் நாயகனுடன் நாயகி நடித்திருக்கும் படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில், திருமணம் குறித்து நடிகையிடம் கேட்ட போது, தற்போது நடிகை சினிமாவில் பிசியாக நடித்து வருவதால், திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்று கூறியிருக்கிறாராம்.

காதலுக்கு அப்பறம் தான் திருமணம் என்றும் கூறியிருக்கும் நடிகை, காதலிக்கும் நபர் சினிமாவிற்கு அப்பாற்பட்டவராய் இருந்தாலும் பரவாயில்லை. உயரமாக, நல்லவராக இருந்தால் போதும், உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை கூறியிருக்கிறாராம்.

நடிகையின் கண்டிஷனுக்கு ஏற்ற நபர் கிடைக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]