அதிவேக வீதியின் வருமானம் 3கோடி

அதிவேக வீதியின் வருமானம் 3கோடிக்கும் அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி கடந்த ஜூலை மாதம் வரை 3 ஆயிரத்து 82 கோடி ரூபா வரை வருமானம் கிடைக்கப்பட்டுள்ளதாக அதிவேக வீதியின் செயல்பாட்டு பிரிவு அதிகாரி எம்.ஒபநாயக தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலை விடுமுறை காலப்பகுதியில் மாத்திரம் ஒரு லட்சம் வரையிலான வாகனங்கள் அதிவேக வீதியினை பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, தற்போது கடவத்தை, பின்னதுவ, கொடகம ஆகிய அதிவேக வீதியில் நுழைவாயில் மற்றும் வெளியேறும் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுக்கின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]