அதிவேக நெடுஞ்சாலை யில் விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் 4 பேர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று முற்பகல் கடவத்தையில் இருந்து கொடகமை வரையில் பயணித்த வேன் ரக வாகனம் ஒன்று வெலிபென்ன பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.
வேன் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]