அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றியவர் பலி

அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றியவர் பலி

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தொன்றில் வெளிநாட்டு பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

கடவத்தை – கெரவலபிட்டிய இணைப்பு அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளின் போது கொங்கிறீட் தூண்களை உயர்த்தும் இயந்திரத்தின் மீது ஏறிய நபரே உயிரிழந்துள்ளார்.

கொங்கிறீட் தூணை சரி செய்து கொண்டிருந்த அவர், சுமார் 15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

54 வயதுடைய சீன நாட்டவரே பலியாகியுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]