அதிவேக நெடுஞ்சாலையில் அதிகளவு வாகனங்கள் பயணிப்பு

இந்த வருடத்தில் நேற்றைய தினத்திலேயே அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளதாக போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் 80 ஆயிரம் வாகனங்கள் தெற்கு அதிவேக வீதியில் பயணித்துள்ளதாகவும், கொழும்பு கட்டுநாயக்க வீதியில் 20 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 12 பேர் வீதி விபத்துக்களில் மரணடைந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் மேற்கொள்ப்பட்ட சோதனைப் பணிகளின்போது வீதிப் போக்குவரத்து நடைமுறைகளை மீறிய 3 ஆயிரத்து 285 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களில் 140 பேர் மது போதையில் வாகனத்தை செலுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]