அதிவேக சாலைகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட அரசாங்கம் பேச்சுவார்த்தை !!!

தெற்கு மற்றும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக சாலை களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

southern express highway
southern express highway

நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரிலியல்லா இதை உறுதிசெய்துள்ளதோடு, இவை 15 அல்லது 20 வருட காலத்திற்கு குத்தகைக்கு விடப்படும் என்று கூறினார்.

அதிவேக சாலைகளை பராமரிப்பு மற்றும் இயக்கம் அந்த நிறுவனத்தின் பொறுப்பாக இருக்கும்.

இவ்வாறு குத்தகைக்கு விடுவது மற்ற நாடுகளில் வெற்றியடைந்துள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலைகளை வெளிநாட்டவருக்கு விற்க போவதாக எதிர்கட்சி கூறிய கருத்துக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்