அதிரடி திருப்பம்- தமிழக கமலாவில் காலாவதியான காலா! ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் நாளை திரைக்கு வர உள்ளது. சென்னையில் இதுவரை ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே காலா ரிலீஸாவது உறுதியாகியுள்ளது.

சென்னையில் பிரபல தியேட்டர்களில் ஒன்றான கமலா தியேட்டரில் காலா ரிலீசாகாது என அந்த தியேட்டர் மேலாளர் கோபி கூறியுள்ளார்.

மேலும் காலா படத்திற்கு பதிலாக ஜுராசிக் வேல்டு என்ற ஹாலிவுட் படம் தான் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது, இதனால் அப்பகுதியை சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. அதேபோல் உதயம் தியேட்டரிலும் படம் வெளியாகாது என தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வியாபார ரீதியிலான உடன்பாடு ஏற்படாத காரணத்தால் மட்டுமே உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகவில்லை என்பது தான் உண்மை எனவும் தெரிய வந்துள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]