முகப்பு Cinema அதியமான் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாகும் கயல் ஆனந்தி

அதியமான் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாகும் கயல் ஆனந்தி

உதயநிதி அடுத்ததாக நடிக்கும் திகில் கலந்த த்ரில்லர் படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை தூண்டில், பிரியசகி உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.எஸ்.அதியமான் இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஓஎஸ்டி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்க டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த படத்தை முடித்த பிறகு உதயநிதி மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘நிமிர்’ படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தை நடித்து முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com