குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை – அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

அதிபர் விளாடிமிர் புதின்
அதிபர் விளாடிமிர் புதின்

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

செயின்ட் பீட்டஸ்பெர்க் நகரின் மையத்திலுள்ள சென்னாயா பிலோசாட் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மெட்ரோ ரயில் நிலையங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சென்னயா மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் அருகில் விழுந்து கிடக்க, வெடித்து சிதறிய ரயிலின் கதவுகளை காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதம் உள்பட எல்லா காரணங்களும் புலனாய்வு செய்யப்படுவதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.
குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக இன்டர்ஃபாக்ஸ் மற்றும் ஆர்ஐஏ செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

உலோகத்துகள்கள் வெடித்து சிதறக்கூடிய வெடிக்குண்டு கருவி இந்த குண்டுவெடிப்புக்கள் ஒன்றில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
திங்கள்கிழமை காலையில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் இருந்த அதிபர் விளாடிமிர் புதின் இப்போது நகரத்தின் வெளியே இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் திமிட்ரி பஸ்கோஃப் தெரிவித்திருக்கிறார்.

“எமது சிறப்பு சேவைகள் தலைவரோடு ஏற்கெனவே பேசியுள்ளதாகவும், இந்த குண்டுவெடிப்புக்கான காரணத்தை அவர்கள் உறுதி செய்து வருவதாகவும் பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் கூறினார்.

இந்த குண்டுவெடிப்பு காரணமாக மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவதாக மாஸ்கோ மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒன்று மற்றும் இரண்டாம் மெட்ரோ தடம் எண்களுக்கு டெக்னாஜிசெஸ்கி நிறுவனம் சேவை வழங்கி வருகிறது.
மெட்ரோ ரயில் தடம் எண் இரண்டுக்கு அடுத்த ரயில் நிலையமான சென்னயா லோஸ்சத் மெட்ரோ ரயில் நிலையம் 1963 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]