நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானியை நிந்தித்து, அச்சுறுத்தியமையைக் கண்டித்து நுவரெலியா தபாற்கந்தோர் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

மலையக ஆசிரியர் முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி, இலங்கை ஆசிரியர் சங்கம்,இலங்கை கல்வி சமூக சம்மேளனம், இலங்கை தமிழ் ஐக்கிய ஆசிரியர் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துக் கொண்டதுடன், “ஆசிரியர் சமூகத்தையும் கல்வி சமூகத்தையும் பெண் சமூகத்தையும் கீழ்தரமாக அவமானப்படுத்திய முதலமைச்சர், உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என, வலியுறுத்தப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]