அதிபர்களின் பதவியுயர்வுகள் தொடர்பான அடிப்படை பரிசீலனை ஜூன் மாதம் ஆரம்பம்

அதிபர்களின் பதவியுயர்வுகள் தொடர்பான அடிப்படை பரிசீலனை ஜூன் மாதம் கல்வியமைச்சில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் மூன்றாம் தர அதிபர் தரத்துக்கு நியமிக்கப்பட்டவர்களை இரண்டாம் தரத்துக்கு உயர்த்துவதற்கான அடிப்படைத் தகுதிகளின் பரிசீலனை ஜூன் 2, 5, 6 மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறும். இதற்காக 1,056 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

இரண்டாம் தரத்திலுள்ளவர்களை முதலாம் தரத்துக்கு உயர்த்துவதற்கான அடிப்படைத் தகுதிகளுக்கான பரிசீலனை ஜூன் 6, 13, 15, 16, 20 மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெறும்.

கல்வித்துறையிலுள்ள ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்ப முன்னைய அரசில் பதவியுயர்வுகள் வழங்கப்படவில்லை என ஏராளமான முறைப்பாடுகள் கல்வியமைச்சுக்குக் கிடைத்திருக்கின்றன. அந்த நிலைமையை மேலும் நீடிக்கவிடாமல் அவரவர் தகுதிக்கேற்ப உரிய காலத்தில் பதவியுயர்வுகள் வழங்கப்படும்” என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]