அதிநவீன கப்பல் ஜனாதிபதியினால் கடற்படையிடம் கையளிப்பு

இலங்கை கடற்படைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதி நவீன கப்பல் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடற்படையினரிடம் கையளிப்பு

இது தொடர்பான வைபவம் இன்றுமாலை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியிலுள்ள கொள்கலன் பிரிவில் இடம்பெற்றது

இந்த யுத்தக் கப்பல் இலங்கையின் தேவைகருதி இந்தியாவினால் தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது கப்பலாகும் .

இந்த கப்பல் மூலம் கடற்பாதுகாப்பு , அவசர நடவடிக்கை , மனிதாபிமான நடவடிக்கை , இடர்தொடர்பிலான நடவடிக்கை , கடல் முறைகேடுகளை தடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளமுடியும்.

மணித்தியாலத்திற்கு 12 க்கும் 14 க்கும் இடைப்பட்ட கடல்மைல் தூரத்திற்கு செல்லக்கூடிய ஆற்றலை இந்த கப்பல் கொண்டுள்ளது.

இந்த கப்பலில் நவீன சிறிய ஹெலிகப்டர் தரைஇறக்ககூடிய வசதிகளும் உள்ளது.

அதிநவீன கப்பல் அதிநவீன கப்பல் அதிநவீன கப்பல் அதிநவீன கப்பல் அதிநவீன கப்பல் அதிநவீன கப்பல்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]