இலங்கை விமானப்படைக்கு அதிநவீன ஏவுகணை கொள்வனவு

இலங்கை விமானப்படைக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, ரஷ்யாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராடர்களினால் கட்டுப்படுத்தப்படும், விமான எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதி ஒன்றை விமானப்படைக்கு கொள்வனவு செய்வது குறித்தே, பாதுகாப்பு அமைச்சு, ரஷ்யாவுடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

S 300 மற்றும் Buk 27 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இதற்கான பரிசீலனையில் உள்ளதாகவும் இந்த ஏவுகணைகளை, விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன், இவை சில வகை வழிகாட்டல் (cruise) மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை (ballistic) தடுக்கும் திறன் கொண்டவை என தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]