அதிக விலைக்கு யூரியா கொள்வனவு

அதிக விலைக்கு யூரியா கொள்வனவு

யூரியா

மெற்றிக்தொன் ஒன்றுக்கு 76 அமெரிக்க டொலர் அதிக பணம் செலுத்தி 72 ஆயிரம் மெற்றிக்தொன் யூரியாவை அவசரமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளது.

யூரியா மெற்றிக்தொன் ஒன்றை சரவதேச சந்தையில் 240 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யக்கூடிய நிலை காணப்படும் போது, ஒரு மெற்றிக் தொன்னுக்கு 316 அமெரிக்க டொலர் செலுத்தி 72ஆயிரம் மெற்றிக்தொன் யூரியா கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கொள்வனவு செய்வதற்கு 5,47,200க்கும் அதிகமான அமெரிக்க பணம் மேலதிகமாக செலுத்தப்படும். இலங்கை நாணயத்தின் பெறுமதியின்படி இந்த தொகை 82 கோடி ரூபாயை அண்மிக்கின்றது.

அரச உர நிறுவனங்கள் இரண்டுக்காக, விவசாய அமைச்சின் ஊடாக இந்த யூரியா தொகை இறக்குமதி செய்யப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]