அதிகாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி

இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடபட்டாவ தம்மலசூரிய பகுதியில் மோட்டார் சைக்கிளை மற்றுமொரு மோட்டார் சைக்கிள் முந்திச்செல்ல முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்தவர்களின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]