அதிகாலை முதல் வழமையான ரயில் சேவை

ரயில் சேவை

அதிகாலை முதல் வழமையான ரயில் சேவை

நாளை அதிகாலை முதல் வழமையான நேர அட்டவணைக்கு அமைவாக ரயில் சேவைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜானக பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.

கடந்த ஒருவாரகாலமாக முன்னெடுக்கப்பட்ட ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிகப்பு தொடர்பில் அமைச்சரவை துணைக்குழுவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பணிப்புறக்கணிப்பை கைவிடத்தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட ஏனைய நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இன்று பிற்பகல் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என்று கூறிய அவர், நாளை அதிகாலை தொடக்கம் வழமையான நேர அட்டவணைக்கு அமைய ரயில்கள் சேவையில் ஈடுபடும் என்றும் உறுதியளித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]