அதிகாலையில் வீடுபுகுந்து துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச்சூடு

தலங்கம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

அதிகாலை 2.30 மணியளவில் உந்துருளியில் பயணித்துள்ள இருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவர் மற்றும் மனைவி மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், காயமடைந்துள்ள குறித்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கணவர், மனைவி நித்திரையில் இருக்கும் போது, கதவை உடைத்து துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]