அதிகாரி படுகொலை; பெண் உத்தியோகத்தர் கைது

அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில், கிராம சேவை பெண் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த கிராம சேவை பெண் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தகாத உறவு முறை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

31 வயதுடைய சந்தேக நபரான பெண்ணை ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்குருவாதொட்ட, தொடங்கொட பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று கொலை செய்யப்பட்டிருந்தார்.

வேரவத்தை பகுதியிலுள்ள தங்குமிடமொன்றில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.

39 வயதுடைய நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்திருநதமை குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]