அதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற நடிகை

அவுஸ்திரேலிய மொடல் நடிகை ஒருவர் மிகவும் கவர்ச்சியான உடையில் பிரான்சின் லூவர் அருங்காட்சியகத்திற்கு சென்ற போது அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் Newsha Syeh. பிரபல மொடல் நடிகையான இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பிரான்சில் லூவர் அருங்காட்சியக அதிகாரிகளால் நான் தடுக்கப்பட்டுள்ளேன். அதற்கு நான் அணிந்திருக்கும் ஆடையே காரணம் என பதிவிட்டுள்ளார்.

அதிகாரிகளின் கண்கணில் மிக மோசமான வெறுப்பு ஒன்று இருந்தது என அவர் தொலைக்காட்சி சேவை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் லூவர் அருங்காட்சியகத்தில் ஆடை அணிவது தொடர்பாக எந்த சட்டதிட்டங்களும் இருப்பதாக நான் அறியவில்லை.

என்னுடைய ஆடையை பிக்காசோ இரசிப்பார் என நம்புவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக லூவர் அருங்காட்சியகம் தரப்பில் எவ்வித விளக்கங்களும் தெரிவிக்கப்படவில்லை.

பிக்காசோ பிக்காசோ

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]