அதிகாரசபையின் முன்னாள் முகாமையாளருக்கு  சிறை

மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, பிரதிவாதிக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 10ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பஸ் உரிமையாளருக்கு 5 இலட்சம் ரூபாய் நட்டஈட்டை வழங்குமாறும் நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.

வீதிப் போக்குவரத்து உரிமத்தை வழங்குவதற்காக, பஸ் உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் முகாமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த தண்டனையை 5 வருடங்களில் நிறைவு செய்ய முடியும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அபராதம் மற்றும் நட்டஈட்டை செலுத்த தவறினால் மேலும் 12 வருடங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]