அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் மக்கள் விடுதலை முன்னணி இணக்கப்பாடு : கி.துரைராஜசிங்கம்

மிகச் சிறந்த தலைமை தமிழர்களுக்கு உள்ள காரணத்தினால் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் மக்கள் விடுதலை முன்னணி இணக்கப்பாடு காட்டியிருக்கிறார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

எமது தலைவர்களுக்கு உள்ள மிகப் பெரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் கொண்டு எமது கோரிக்கைகளில் அதி உச்சமாக பெறக்கூடிய அதிகாரங்களை உள்ளடக்கி முழுமையான இணக்கப்பாட்டுடன் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் அது தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு செங்கலடி சீனிப்போடியார் ஞாபகர்த்த மண்டபத்தில் நேற்று (15) சனிக்கிழமை மாலை நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி ஏறாவூர்ப்பற்று கிளை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அதிகாரங்கள்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழர்களுக்கு உரிமை கொடுத்துவிடுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிரணி மக்களை குழப்பி வருகிறது தமிழர்களுக்கு உரிமை கொடுத்து விட்டார்கள் என்ற வார்த்தை விசம் மாதிரி மிக வேகமாக சென்றடைந்து பெரும் குழப்பங்களை ஏற்படுத்தும் இவ்வாறு எந்த வித குழப்பங்களும் ஏற்படுத்தாத விதத்திலே நிதானமாகவும் பக்குவமாகவும் எமது தலைவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக உருவாக்கப்பட்டு ஆறு குழுக்களாக பிரிந்து ஒவ்வவொரு குழுவும் யார் யாருக்கு என்ன என்ன கொடுக்கப்பட வேண்டும் என உப குழுக்களின் அறிக்கையிலே அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்

சுங்கம், வெளிநாட்டு உறவு, விமானப் போக்குவரத்து, தபால் மற்றும் புகைவண்டிப் போக்குவரத்து போன்ற முழுநாட்டுக்கும் சேவையான விடயங்கள் மத்திய அரசுக்கு இருக்க வேண்டும். கல்வி, சுகாதாரம்,மீன்பிடி, கூட்டுறவு போன்ற சகல விடயங்களும் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற வகையில் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

மிகச் சிறந்த தலைமை தமிழர்களுக்கு உள்ள காரணத்தினால் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் மக்கள் விடுதலை முன்னணி இணக்கப்பாடு காட்டியிருக்கிறார்கள்.

உலக நாடுகள் அங்கீகரிக்கக் கூடிய தலைவராக சம்பந்தன் ஐயா காணப்படுகிறார. மிகச் சிறந்த அமைதியாக வியடங்களைக் கையளக்கூடிய தலைவர் என இங்கு வரும் சகல அரச தலைவரர்களும் இராஜதந்திரிகளும் கூறியுள்ளார்கள். நாட்டிலுள்ள இரு தலைவர்களும் அவரைக் கண்ணியமாக மதிக்கின்றார்கள்.

எமது தலைவர்களுக்கு உள்ள மிகப் பெரிய நெருக்கடிகளை மனதில் கொண்டு எமது கோரிக்கைகளில் அதி உச்சமாக பெறக்கூடிய அதிகாரங்களை உள்ளடக்கி முழுமையான இணக்கப்பாட்டுடன் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் அது தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் இந்த ஆண்டு முடிவுக்குள் நிறைவேற்றப்படும் இதற்காக சிங்கள தலைவர்கள் பல்வேறு வகையான சிரமங்களை எதிர் நோக்குகின்றார்கள். பண்டா – செல்வா ஒப்பந்தத்தை உருவாக்கி தமது உரிமைய கெடுக்கப்போகின்றார் என்பதற்காக முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவை சுட்டுக்கொண்டார்கள். இவற்றையும் நாங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் ஒரே குரலில் பேசுகின்றார்களா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளெட் போன்ற கட்சிகள் உள்ளன.

தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகளும் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்கள். அதிகளவான பேச்சுவார்த்தைகள் இராஜதந்திரம் விடயங்களில் அவர்களுடைய புலமை தொடர்பாக தமிழரசுக் கட்சித் தலைமைக்கு இருக்கின்ற புலமை அளவிற்று அவர்களுக்கு இல்லை என்பதில் அனைவருக்கும் உடன்பாடு உள்ளது.

எந்தவொரு விடயத்தையும் இடத்திற்கு வந்து தூக்கி எறிந்துவிட்டு போவதென்பது எங்களுக்குப் அருகில் இருப்பவர்கள் கை தட்டுவதற்கு மாத்திரமே சரியாக இருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விடயமாக இருக்காது. பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போது பலவிதமான குழப்பங்கள் வரும் அவற்றை கவனமாக சீர்செய்துகொண்டு செல்ல வேண்டும்” என்றார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]