அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியல்; 3வது முறையாக முதலிடத்தில் பிரபல நடிகர் – தமிழ் நடிகர்கள் எந்த இடத்தில்?

Forbes India நிறுவனம் 2018ல் இந்தியாவில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தொடர்ந்து 3வது முறையாக சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார்.

அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு 253.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். அவர் 228.09 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். 2.O படத்தில் நடித்துள்ள இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் , மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 185 கோடி சம்பாதித்துள்ளார். இந்தப் பட்டியலில் பிரபல நடிகை தீபிகா படுகோன் 4 ஆம் இடம் பிடித்துள்ளார். இவர் ரூ.112.8 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்த முதல் பெண் பிரபலம் தீபிகா படுகோன் தான். கடந்த ஆண்டு 7-ஆம் இடம் வகித்து வந்த பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு 49-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 2018- ஆம் ஆண்டு வெறும் 18 கோடியை மட்டுமே பிரியங்கா சோப்ரா வருவாயாக ஈட்டியுள்ளார். இந்தப் பட்டியலில்  தோனி (101.77 கோடி) மற்றும் சச்சின் (80 கோடி) முறையே ஐந்து மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.

ரூ.66.75 கோடி வருவாய் ஈட்டி ஏ.ஆர் .ரகுமான் 11-வது இடத்தில் உள்ளார். ரஜினிகாந்த் ரூ.50 கோடி வருவாயுடன் 14-வது இடத்தில் உள்ளார். மேலும் பவன் கல்யாண், விஜய், என்.டி.ஆர், விக்ரம், மகேஷ் பாபு, சூர்யா, விஜய் சேதுபதி, நாகர்ஜுனா, மம்மும்டி போன்ற தென்னிந்திய நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ரூ.15.7 கோடி வருவாயுடன் நயன்தாரா 69-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]