அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் – கோஹ்லி வருமானம் எவ்வளவு தெரியுமா?

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் முதல் நூறு விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி 83வது  இடத்தை பிடித்துள்ளார்.

இவர் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் இந்திய அணித்தலைவர் என்ற அந்தஸ்தில் உள்ளதால், அவருக்கு விளம்பர பட வாய்ப்புகள் அதிகம்.

கடந்த 12 மாதங்களில் 24 மில்லியன் டொலர்கள் வருமானத்தை கோஹ்லி ஈட்டியுள்ளார். இதில் சுமார் 20 மில்லியன் டொலர்களை விளம்பரத்தின் மூலமாகவும், 4 மில்லியன் டொலர்களை கிரிக்கெட்டின் மூலமாகவும் கோஹ்லி சம்பாதித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தை பிரபல குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை மெஸ்சியும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]