அதிகமான சிறுவர் வன்முறை குறித்த முறைப்பாடுகள் – கொழும்பு

சிறுவர் வன்முறை

அதிகமான சிறுவர் வன்முறை குறித்த முறைப்பாடுகள் – கொழும்பு

வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் கொழும்பு பிரதேசத்திலே அதிகம் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சிறுவர் வன்முறைகள் குறித்த முறைப்பாடுகள் பதிவாகும் மாவட்டங்களில் கம்பஹா மாவட்டம் 2ஆவது இடத்திலும் 3ஆவது இடத்தில் குருநாகல் மாவட்டம் உள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

சிறுவர் வன்முறை தொடர்பில் 2008 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் குறிப்பிடுகின்றது.

சிறுவர் துஷ்பிரயோகம் , சிறுவர்களைத் தாக்குதல், பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மட்டும் 64,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]