உலகில் அதிகமான நீலப்படங்களை இணையத்தில் இணைத்த நாடாக இலங்கை காணப்படுவதாக கூகிள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் இந்த நிலைமை காணப்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியலாளர் பெத்தும் புத்திக தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் கணினி அறிவு நூற்றுக்கு 38 வீதம் காணப்படுகின்றது.
அதில் நூற்றுக்கு 89 வீதமானவர்கள் ஆண்கள் எனவும், இலங்கை தொழில்நுட்ப வளர்ச்சியடையாத நாடுகளில் ஒன்றாகவும் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறைமை தொடர்பிலும் கணினி குற்றங்கள் தொடர்பிலும் சிறுவர்களுக்கு இணையத்தள பயன்பாட்டிற்கு இடமளிக்க கூடிய முறையினையும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
விசேடமாக சைபர் தாக்குதல்கள் தொடர்பிலும், சமூக வலைத்தளங்கள் பயன்பாடு தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]