அதி­கா­ரப் பகிர்வு வேண்­டும் – ரவூப் ஹக்­கீம்

                அதி­கா­ரப் பகிர்வு வேண்­டும் – ரவூப் ஹக்­கீம்

உண்­மை­யில் நாடு துண்­டா­டப்­ப­டா­மல் இருக்க வேண்­டு­மா­னால் அதி­கா­ரப் பகிர்வு வேண்­டும். யதார்த்­த­பூர்­வ­மாக இது பற்­றிச் சிந்­திப்­பது அனை­வ­ரி­னதும் தார்­மீகக் கட­மை­யா­கும். இது அர­சி­யல் தலை­மை­க­ளுக்­குள்ள மிகப் பெரிய பொறுப்­பும் ஆகும். இதனை அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்கு விட்­டுச் செல்ல முடி­யாது.

சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வ­ரும் நகர திட்­ட­மி­டல் மற்­றும் நீர் வழங்­கல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீம் தெரி­வித்­துள்­ளார்.

ஊட­கம் ஒன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, அதி­கா­ரப் பகிர்வு என்­பது தமிழ், முஸ்­லிம் மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல. வழி­ந­டத்­தல் குழு­வில் நானும் உறுப்­பி­னர். எங்­க­ளு­டைய குழு­வுக்கு முன்­னால் வந்து தெற்­கி­லுள்ள எல்லா முத­ல­மைச்­சர்­க­ளும் இருக்­கின்ற அதி­கா­ரங்­களை அதி­க­ரித்­துத் தரு­மாறே கேட்­டார்­கள். ஆளு­ந­ரின் தலை­யீ­டு­க­ளைக் குறை­யுங்­கள் என்­றார்­கள். அர­சின் தலை­யீட்­டை­யும் குறைக்­கச் சொன்­னார்­கள்.

இந்த நாட்­டில் அதி­கா­ரப்­ப­கிர்வு கலா­சா­ரம் வந்து விட்­டது. இதனை இனி இல்­லா­மல் செய்ய முடி­யாது. இத­னால் நாடு துண்­டா­டப்­பட்­டு­வி­டு­மென்று பீதியை சில தீவி­ர­வா­தக்­கு­ழுக்­கள் உரு­வாக்­கு­கின்­றன. அவ்­வா­றல்ல. உண்­மை­யில் நாடு துண்­டா­டப்­ப­டா­மல் இருக்­க­வேண்­டு­மா­னால் அதி­கா­ரப் பகிர்வு வேண்­டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]