அண்ணியுடன் முதல்முறையாக நடிக்கும் கார்த்தி – எந்த படம் தெரியுமா?

தேவ் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படத்தில் நடிக்க உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘கைதி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதியை அடுத்து இயக்குனர்கள் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் ஜீத்து ஜோசப் ஆகியோரின் படங்களில் நடிக்க கார்த்தி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதில் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் நாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் கார்த்திக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பாபநாசம்’ படத்தை இயக்கியவர் தான் ஜீத்து ஜோசப்.

முதல் முறையாக கார்த்தி, அவருடைய அண்ணி ஜோதிகாவுடன் நடிக்க உள்ளது  ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]