அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி

WWEஇன் மிகப் பெரிய ரெஸ்லிங் நட்சத்திரமாக வலம் வந்த அண்டர்டேக்கர் இனி ரெஸ்லிங் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

WWE என்றால் பல நம்மில் பலருக்கு நினைவு வருபவர்களில் அண்டர்டேக்கர் முதல் ஆளாக இருப்பார். அத்தனை பிரபலம் அவர்.

கதி கலங்க வைப்பவர்

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக WWE அரங்கில் கொடி கட்டி பறந்தார் அண்டர்டேக்கர். அவர் களத்தில் குதித்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எதிரியின் நிலையை நினைத்து கதி கலங்கிப் போய் தான் இருப்பார்கள். (WWEஇல் வருவது எல்லாம் கப்சா அடி என தெரியும் வரை..)

ரசிகர்களின் ஆதர்ச நாயகன்

WWEஇல் வருவது பலவும் நாடகமே என ஒரு கட்டத்தில் உலகம் முழுவதும் தெரிந்து விட்ட பின்னரும், அண்டர்டேக்கர் ரசிகர்களின் ஆதர்ச நாயகனாகவே இருந்தார். ரெஸில்மேனியாவில் 21 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு போட்டியில் கூட தோற்காமல் சாதனை செய்தவர் என்ற பெருமையை இன்னும் அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அதிர்ச்சி செய்தி

கடந்த சில ஆண்டுகளாகவே தங்கள் நாயகன் சோர்ந்து போய் இருப்பதையும், வருடத்திற்கு ஒரீரு போட்டிகளில் மட்டுமே ஆடுவதையும் கண்டு வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு இடியாக வந்துள்ளது ஒரு செய்தி.

ஒப்பந்தம் முடிந்ததா?

அண்டர்டேக்கர் கிட்டதட்ட இனி ரெஸ்லிங் போட்டிகளில் ஆடமாட்டார், WWE நிறுவனத்துடன் அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடக்கவுள்ள ரெஸில்மேனியா மற்றும் சௌதி அரேபியா சிறப்பு ரெஸ்லிங் நிகழ்ச்சிகளில் அண்டர்டேக்கரின் பெயர் இது வரை இடம் பெறவில்லை.

உறுதி இல்லை

எனினும், இந்த செய்தியை WWE அல்லது அண்டர்டேக்கர் உறுதிப்படுத்தவில்லை. அண்டர்டேக்கர் அடுத்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள உள்ளார் என்பது மட்டுமே தெரிந்த தகவலாக உள்ளது.

மீண்டும் வருவாரா?

WWE முன்பு பல முறை அண்டர்டேக்கர் இனி ஆட மாட்டார் என்ற எண்ணத்தை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி விட்டு, திடீரென அவரை களமிறக்கும். அது போல ஏதாவது நடக்காதா என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது வரை அவரின் பழைய போட்டிகளின் வீடியோவை பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]