அட நீங்க இந்தராசிக்காரரா?? அப்போ உங்களிடம் கொஞ்சம் உஷாராதான் இருக்கனும்- நீங்க எந்த ராசி??

அட நீங்க இந்தராசிக்காரரா?? அப்போ உங்களிடம் கொஞ்சம் உஷாராதான் இருக்கனும்- நீங்க எந்த ராசி??

 

ஜோதிடப்படி சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நினைத்ததை சாதித்து மற்றவர்கள் தங்களுக்கு கீழ்படியுமாறு இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

அப்படிப்பட்ட, ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் ஆற்றல் நிறைந்தவர்கள் என்றாலும் பேராசையுடன் கூடிய வேகமும், மூர்க்க குணமும், போர்க்குணமும் கொண்டதாக விளங்குவார்கள்.

இந்த ராசியின் கிரகங்களின் தன்மை தைரியம் மற்றும் பலத்தை தூண்டி, மற்றவர்களை தனக்கு கீழ்படியும் படி செய்யும் குணத்தை உண்டாக்குகிறது.

மேலும் இந்த ராசிக்காரர்களின் சாத்வீகமான கிரகங்கள், பிடிவாத குணம், குடும்ப ஒற்றுமை சீர்குலைவு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் நிலைமாறும் குணம் கொண்ட, மற்றவர்களுக்குத் தீங்கு இல்லாத கோப ஆவேசத்தையும், தன்போக்கிற்கு நடந்து கொள்பவராக இருப்பதால், இவர்களை அடக்க முடியாது.

இவர்கள் தானே சாந்தமானாலே தவிர, மற்றவர்களால் சராசரி நிலைக்கு கொண்டுவர முடியாது. அதேபோன்று வைராக்கியம் கொண்டு செயல்படும் போது இதன் வீரமான, வேகமான போக்கு இவர்களுக்கு இருக்கும்.

மேலும் ஒரு பெண்ணிற்கு வீண் ஆரவார வாழ்க்கையைக் கொடுத்து மற்றவர்களை தன் வரட்டுப் பிடிவாதம் மற்றும் வீம்பான போக்கினால் தீமைகள் கொடுத்து கெடுப்பதற்கும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பான, வேகமான போக்கு, வேகம், கோபம், சீற்றம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். ஆனால் ஆற்றல் மிகுந்த அறிவாற்றலைக் கொண்ட இவர்கள் எந்த காரியத்திலும் சீற்றம் நிறைந்ததாகவும், முற்போக்கான துணிவு, பயப்படாத தன்மையை வெளிப்படுத்துகின்ற நபராக விளங்குவார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் திடமான தீவிர முயற்சியின் பெயரால் ஏற்படுகின்ற தைரியமும், யாருக்கும் அஞ்சாத குணத்தையும் கொண்டவர்கள்.

இது இந்த ராசிக்காரர்களின் முற்போக்கு முயற்சி என்று கூட கூறலாம். மேலும் இவர்கள் தவறுகளுக்கு ஆதரவு கொடுக்காத ஒழுக்கத்தையும், தனது வல்லமையை உயர்த்துவதிலும் சிறப்பானவர்களாக திகழ்பவர்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]