அட நம்ம கண்ணழகி பிரியா வாரியரா இது?? இப்படி மாறிட்டாங்களே – புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

யூ-டியூப் பாடல்களின் மூலம் ‘ஜிமிக்கி’ கம்மல் ஷெரிலுக்கு பிறகு ‘ஒரு அடார் லவ்’ படத்தின் நாயகிகளில் ஒருவரான பிரியா பிரகாஷ் வாரியர் சென்சேஷன் நாயகி லிஸ்டில் வந்துவிட்டார். யார் இந்த பிரியா என்று பலரும் தற்போது தேட, கூகுள் தேடல் பட்டியலில் இந்திய அளவில் டாப் ஆகிவிட்டார் பிரியா.

ஒரு அடார் லவ்’ படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஒமர் லுலு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான வினித் ஶ்ரீனிவாசன் பாடியுள்ள ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு யூ-டியூபில் வெளியிடப்பட்டது.

கண்ணழகி என்று இளம் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாக கொண்டாடப்பட்டவர் பிரியா வாரியர். இவர் அந்த பாடலுக்கு பிறகு நிறைய படங்கள் நடிக்கிறார் என்று தகவல்கள் எல்லாம் வந்தது. ஆனால் உண்மை என்ன என்பதை அவரே கூறினால் தான் உண்டு.

தற்போது அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதைப் பார்த்த ரசிகர்கள் கண்ணழகியா இது என அதிர்ச்சியாகியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]